Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!

போதிய மூலதனம் இல்லாத வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கிரத்து செய்து வருகின்றது. இதே போன்று சில வங்கிகளின் சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை தளமாக கொண்டு இயங்கும் இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனெனில் கூட்டுறவு வங்கி நிதி நிலை மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் கிடைக்குமா என்பது குறித்து அச்சப்படத் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

டெபாசிட் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 99 விழுக்காடு அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு விடும் என்று உறுதி அளித்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்த ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த கட்டுப்பாடு அடுத்த ஆறு மாதங்களில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக ஏற்றுக்கொள்ளச் இன்டிபென்டன்ஸ் கூட்டுறவு வங்கியின் தலைமை அதிகாரிகள் கடன் மற்றும் அட்வான்ஸ் வழங்க முடியாது. இருப்பினும் வங்கி உரிமம் ரத்து செய்யப்படவில்லை என்றும், வங்கி தொடர்ந்து இயங்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |