Categories
மாநில செய்திகள்

வீடுகளில் மின் இணைப்பு பெற வேண்டுமா..? இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.!!

வீடுகளில் மின்சாரா இணைப்பு பெற  வேண்டுமெனில் இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்  என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ் அழுத்த மின் இணைப்பு  பெற வேண்டுமெனில்  அதற்கான படிவத்தை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துச் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து இணைப்பு பெற வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது.

அவ்வாறு வீட்டுக்கு மின் இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடம் மின் வாரிய அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில்,  மின் இணைப்பு பெறும்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 1-ஆம்  தேதி முதல் இணைப்புகள் பெற விரும்புவோர் இணையத்தில் மட்டுமே தங்களது ஆவணங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிசைகள், விவசாய நிலங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன், துணை ஆவணங்களை ஸ்கேன் செய்து மின் வாரியத்தின் (TANGEDCO) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது

Categories

Tech |