திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலி இளைஞர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த நாகேந்திரா என்பவர் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் மீண்டும் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். இதனால் அவரது முதல் காதலி கோபம் கொண்டு நாகேந்திராவிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவரோ மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததோடு திருமணம் செய்ய முடியாது என உறுதியாக கூறியுள்ளார்.இந்நிலையில் தனது இரண்டாம் காதலியுடன் நாகேந்திரன் மாயமாகி விட்டதாக முதல் காதலிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர் நாகேந்திரன் மீது அசிட் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் நாகேந்திராவின் முகம் கருகி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருமணம் செய்ய மறுத்த இளைஞன் மீது காதலி ஆசிட் வீசியது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.