Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார்.

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. பள்ளம் தோண்டும் பணியில் 25 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  இயந்திரம் மூலமாக 3 மணி நேரம் துளையிடும் பணி நடைபெற்று வருகின்றது.

சுர்ஜித் உயிரோடு மீட்க வேண்டும் என்று மத வேறுபாடு இன்று பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்கள் , மசூதிகள் , இந்து கோவில்கள் என வழிபாடு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali  என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |