Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு அதிகாரம் இல்லை…. எங்களுக்கு சொல்லாதீங்க – புதுவை முதல்வர் ஆவேசம் …!!

மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் பிரதேசங்கள்.

இது  மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுவார்கள். கூறிக் கொண்டிருப்பார்கள், நாங்கள் கேட்க மாட்டோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அது சிறியதாக இருந்தாலும்,  பெரியதாக இருந்தாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எல்லா சட்ட மன்றத்திற்கும் ஒரு அதிகாரம் தான் இருக்கிறது. அதை எடுப்பதற்கும் , தடுப்பதற்கு பிரதமர் மோடிக்கோ , அமித்ஷாவுக்கோ அதிகாரம் கிடையாது.

எங்கள் சட்டமன்றத்தில் CAA  சட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சருக்கு அனுப்பி இருக்கிறோம். எங்கள் மக்கள்  நாட்டின் வளர்ச்சிக்காக அவர் இந்துக்களாக இருந்தாலும் சரி , கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி , இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி புத்தர் களாக இருந்தாலும் சரி எல்லோரும் இந்த நாட்டின் வளர்ச்சிக்க்காக பாடுபடுகிறார்கள் , ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.

எங்கள் மாநிலத்துக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. முகமதியர் சமுதாயத்தை சேர்ந்தவர் கோவில் காட்டியுள்ளார்.இந்து குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் மசூதிக்கு சென்று வருவோம். எங்களுக்கு மதத்தை பற்றி நரேந்திர மோடியும் , அமித் ஷாவும் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கடுமையாக சாடினார்.

Categories

Tech |