Categories
தேசிய செய்திகள்

” சொன்னா கேளுங்க உங்களுக்கு இந்த நோய் இல்லை” – பீதியில் நிகழ்ந்த சோகம்..!

ஆந்திர மாநிலத்தில் கொரானா  வைரஸ் தாக்கி இருப்பதாக நம்பிய நபர் ஒருவர் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவ விடக் கூடாது என்ற அச்சத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரமாநிலம் தொட்டு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான பாலகிருஷ்ணய்யா இவர் மருத்துவ ஆலோசனைக்காக சனிக்கிழமை அன்று அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்ட பாலகிருஷ்ணய்யா.

தனக்கு  கொரானா வைரஸ் நோய் தாக்குதல் இருப்பதாக நம்பி உள்ளார்.  குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் உங்களுக்கு இந்த நோய் இல்லை என்று பலமுறை   கூறியும் அதை நம்பவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் மற்றவர்கள் யாரும் தன்னை  நெருங்க விடாமல் கல்லால் எறிந்து விரட்டி உள்ளார். கிராம மக்கள் அனைவரும் விலகி இருக்கும்படி கூறிய உள்ளார்.  பெரும் பீதியில் இருந்த அவர் குடும்பத்திற்கும் கிராமத்திற்கு தொந்தரவு கொடுப்பதாக நினைத்து வருந்தி உள்ளார்.

கொரானா தொடர்பான பல வீடியோக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர் கதவை பூட்டிக்கொண்டு திடீரென  தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரானா  குறித்த தவறான தகவல் புரிந்து கொண்டதால் இவ்வாறு நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |