கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா குறைந்துள்ளது. பிரமாவட்டங்களில் அந்த பலன் படிப்படியாகத்தான் கிடைக்கும். சென்னையில் குறைந்து இருக்கின்றது, மற்ற மாவட்டங்களில் ஏறியிருக்கிறது. இந்த நோய் எப்படி என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது.
இன்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. நோய்களை தடுப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம். மக்கள் தான் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மக்களுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க முடியும். மக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றி நடக்கின்றார் களோ, அந்த அளவிற்கு நோய்கள் குறையும். இது எல்லோருக்கும் தெரியும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.