Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுவாக செய்தி போட்டுறாதீங்க..! மக்களுக்கு பதட்டம் உருவாகிடும்… அமைச்சர் அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வில், ஏதாவது ஒரு பக்கம் நிற்க  வேண்டும், மின்சார வாரியத்தினுடைய இழப்புகளை சரி செய்யக்கூடிய சூழலில் இருக்க வேண்டும், சலுகைகள் கொடுக்க வேண்டிய அளவிற்கு மின்சார வாரியம் இருக்கா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வு என்பது சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கான பாதிப்புகளும் இருக்கிறது விலைவாசி உயர்வில்….

சிலிண்டர் விலை ஏறினால் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்புகள் இருக்கிறது, விலைவாசி உயர்வு என்பது அனைவருக்குமான உயர்வு தான். அதில் அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிப்புக்கு உள்ளாக கூடிய உயர்வுகள் தான். மின்சார கட்டணத்தை பொறுத்த வரைக்கும்  சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கட்டணங்கள் கூடுவது என்பது அரசு பரிசீலிக்கும் என்று சொல்லியிருக்கிறோம். குறைப்பதற்காக தான் பரிசீலிக்கிறோம் என்று சொல்கிறோம்…

மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று பொதுவாக போட்டு விடாதீர்கள். நான் சொல்வது சிறு, குறு,  நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்து இருக்கக்கூடிய தொழில் முனைவோர்களுக்காக உயர்த்தப்பட்டிருக்கின்ற டிமாண்ட் சார்ஜ், பிக்சட் சார்ஜ் அதிகமாக இருக்கிறது என்ற அவர்களுடைய கருத்தை  அரசு பரிசீலிக்கும் என்று சொல்கிறேன்.

நீங்கள் ஒட்டுமொத்தமாக மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்று செய்தியை வெளியிட்டு ஒரு பதட்டத்தை உருவாக்கி விட வேண்டாம். அதனால் வேறு எந்தவிதமான மாற்றங்களும் இல்லை, வீடுகளுக்கெல்லாம் போடப்பட்ட கட்டணங்களில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை, வேறு கட்டணங்கள் பல்வேறு வகையில் இருக்கிறது. அவர்களுக்கு எந்தவித மாற்றங்களும் இல்லை. இந்த குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கட்டணங்கள் மட்டும் தான். பிக்சட் சார்ஜ், டிமாண்ட் சார்ஜில் மட்டும்தான் மாற்றங்கள் செய்யப்படும். அது அவர்களுடைய  கருத்து அடிப்படையில் செய்யப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |