நீங்கள் தினமும் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய சில எளிய வழிமுறைகளை எதிர்பார்ப்போம்.
உணவில் கலப்படம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுபோன்ற பல போலி உணவுகள் சந்தையில் கிடைக்கின்றது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியும் சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா இல்லை உண்மையான அரிசியா என்பதை கண்டுபிடிக்க சில எளிய முறைகளை பார்ப்போம்.
ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அரிசியைப் போட்டு சிறிது நேரம் கழித்து பார்க்கவும். அரிசி மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. ஏனெனில் அரிசி பொதுவாக தண்ணீரில் மிதக்காது.
அரிசியை சிறிதளவு எடுத்து லைட்டரை பயன்படுத்தி எரிக்கவும். அரிசி ஒரு பிளாஸ்டிக் வாசனை தருகிறதா என்று பார்க்கவும்.
அரிசி கொதிக்க வைக்கும் போது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அது பானையின் மேல் ஒரு தடிமனான அடுக்கை உருவாக்கும்.
பிளாஸ்டிக் அரிசி சிறிது நேரம் வெயிலில் வைத்து இருந்தால் முற்றிலும் பிளாஸ்டிக் ஆகிவிடும். பிளாஸ்டிக் அரிசி என்பதை கண்டறிய இதுதான் சிறந்த வழி.
ஊறவைக்கும் போது நினைவில் கொள்ளுங்கள், சில பிளாஸ்டிக் அரிசி தண்ணீரில் மிதப்பது இல்லை. ஏனென்றால் 100% இது பிளாஸ்டிக் அல்ல. உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக் கிழங்கையும் சேர்த்து தயார் செய்யப்பட்டது.