யூரோ நாட்டு மக்களின் தகவல்கள் மட்டும் பகிர்ந்து கொள்ள மாட்டாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது உங்களின் தனிப்பட்ட தகவல்களை அதன் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தலாமா என்று தான் அந்த அறிவிப்பில் அனுமதிக் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களின் கணக்கு முடக்கப்படும்.
ஆனால் இது எல்லா நாடுகளிலும் பொருந்தும் என்று நினைத்துக்கொண்டு உலக நாடுகள் அனைத்தும் இந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்து கொண்டிருந்தனர். அதன் காரணமாக வாட்ஸ்அப் பயனாளர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்தது. வாட்ஸ்அப் பயனர்களின் சரிவை பார்த்த அந்நிறுவனம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அது என்னவென்றால் யூரோப் நாட்டில் உள்ள மக்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யூரோப் நாட்டு மக்களே நீங்கள் வாட்ஸ்அப் குறித்த தகவலைப் பற்றி பயப்பட வேண்டாம்.
உங்கள் நாடு தகவலை எல்லாம் பாதுகாத்து வைத்துள்ளனர். யூரோப் நாட்டு மக்களின் தகவலை மட்டும் நாங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். உங்கள் நாட்டின் அரசு இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக உள்ளது. மற்ற நாடுகள் இவ்வாறு கிடையாது. இதன் காரணமாக மற்ற நாடுகளின் தகவல்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த தகவல் மற்ற நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முக்கியமாக இந்திய நாட்டில் மக்கள், யூரோப் நாட்டு மக்களின் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், எங்களது தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம். என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்காரணமாக இந்திய நாட்டில் வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியை தவிர்த்து வருகின்றனர். இதனால் தற்போது பலரும் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி சிக்னல் மற்றும் டெலகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.