Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க உடனே போங்க… என்ன தேவையோ உடனே செய்யுங்க? உத்தரவு போட்ட முதல்வர் …!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  அன்பழகனின் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது ? அரசு  தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது.  சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவிலேயே பூரண நலம் வேண்டும் என்று முதலமைச்சர் மருத்துவரிடம் பேசினார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு  அரசு சார்பில், உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்கு சென்று, அங்கு மருத்துவ குழுவினரோடு பேசி,  என்ன தேவையோ ? அதை செய்து கொடுங்கள் என்று முதலமைச்சர் என்னை அனுப்பி வைத்தார். ஓமாந்தூரார் மருத்துவமனை டீன், மருத்துவ நிபுணர்கள் எல்லாருமே இங்கு வந்து இருபது நிமிடத்திற்கு மேலாக மருத்துவம் குறித்தும், அவரின் உடல் நிலை இன்னும் என்ன மாதிரியான சிகிச்சை இருக்கும் ? என்ன தேவை ? என்ன செய்யனும் ? என்று ஆலோசனை செய்தோம். அவரின் மகனையும் சந்தித்தோம், அவர் தன்னுடைய நன்றியை முதலமைச்சரிடம் சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |