Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீங்க அவுங்களுக்கு வாக்களிக்குறீங்க” அங்க போய் கேளுங்க ….அமைச்சர் மீது அழகிரி காட்டம் …..!!

‘நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்’ என்று சொல்லும் அமைச்சர்களால் நாங்கள் எளிதில் வெல்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராஜேந்தரபாலாஜி  போன்ற அமைச்சர்கள் ரேஷன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் போகிறது என்றால் அவர்களை, ‘நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்’ எனச் சொல்லுகிறார் மக்கள் பிரதிநிதியாக இருப்பததால்தான் உங்களை வந்து பார்க்கிறார்கள். அவர்களை அப்படி சொல்லக் கூடாது.

தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் உள்ளது. இவர்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் என்பது தவறான விஷயம்.இவர்களிடம் எந்தவித ஒரு பொருளாதார வசதியும் கிடையாது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு நிதியையும் கேட்டு போராடி பெறாமல் விட்டுவிடுகிறது. மாநிலத்தின் உரிமைகளை பெற முடியாமல் போய்விடுகிறது இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.

Categories

Tech |