Categories
தேசிய செய்திகள்

என்னை வெறுக்கிறீர்கள்…. ”அரவணைத்த மோடி” …. மக்கள் நெகிழ்ச்சி …..!!

பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் கூட மத்திய அரசு பணியில் ஹிந்தி நபர்கள் ஆதிக்கம் செலுத்துவது , ஹிந்தி நாளில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியது என மொழி அரசியலை தமிழக எதிர்க்கட்சிகள் கட்சிதமாக பயன்படுத்தி வந்தன.

இதை தொடர்ந்தே பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம்  #gobackmodi  என்ற ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாவது மட்டுமல்லாமல் உலகளவில் ட்ரெண்ட் ஆகும்.இது பாஜகவுக்கு பெரும் தலைவலியாகவே அமைந்தது. பிரதமருக்கு எதிராக ஹேஷ்டாக் பதிவிட்டுவது உலகளவில் ட்ரெண்ட் ஆவது பாஜகவை வேதனையடைய வைத்தது. இந்நிலையில் இன்று சீன அதிபர் மற்றும் மோடி தமிழகம் வருகைக்கும் தமிழகத்தில் ஹேஷ்டாக் அனல் பறந்தது.

அதில் தமிழகமே மீண்டும் இந்திய பிரதமரை புறக்கணித்தது. அதே வேளையில் சீன பிரதமரை வரவேற்றது. #TN_welcomes_XiJinping  என்று ஹேஷ்டாக் பதிவிட்டும் , இந்திய பிரதமர் மோடியை எதிர்த்து  #gobackmodi என்ற ஹேஷ்டாக் பதிவிட்டு தமிழக மக்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மற்ற நாட்டு பிரதமரை வரவேற்ற தமிழக மக்கள் உள்நாட்டு பிரதமரை எதிர்ப்பது அனைத்து நாட்டு மக்களையும் உற்றுநோக்க வைத்தது.

இந்நிலையில் தமிழகம் வந்து இறங்கிய இந்திய பிரதமர் மோடி தமிழில் ட்வீட் பதிவு செய்து   #gobackmodi   என்று பதிவிட்ட அனைவரையும் வியப்படைய வைத்தார். பிரதமரின் தமிழ் ட்வீட் பதிவை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . அடுத்தடுத்த 3 ட்வீட் பதிவிட்ட மோடி தமிழக மக்களை வென்றுள்ளார். அதில் , சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டார்.

#gobackmodi  என்று பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை காட்டி பதிவிட்ட மக்களையும் தனது தமிழ் ட்வீட்_டால் கவர்ந்துள்ளார். பாஜக தமிழ் மொழியின் எதிரி என்றெல்லலாம் பல்வேறு கருத்துக்களை மத்திய அரசின் மீது தமிழக எதிர் கட்சிகள் வைத்து தமிழ் எதிரியாக பாஜகவை சித்தரித்த நிலையில் அனைத்தையும் தனது ட்வீட் பதிவால் மோடி சிதறடித்துள்ளார். மோடியை  #gobackmodi  மோடி என்று பதிவிட்டும் அவர் தமிழை உயர்த்தி பிடித்துள்ளது தமிழக மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Categories

Tech |