செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பழனிசாமி அவர்களே நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது, நீங்கள் தான் அமைப்பு செயலாளர், நீங்கள் தான் மாவட்ட செயலாளர். இப்போதுதான் கோடநாடு பிரச்சனைக்கு பின்னால் மாவட்ட செயலாளரை தூக்கி கையில் கொடுக்கிறீர்கள். நீங்கள் தான் தலைமை நிலைய செயலாளர், நீங்கள் தான் இணை ஒருங்கிணைப்பாளர் , அங்கு இருக்கின்ற வட்டத்துக் கூட நீங்கள் தான் செயலாளர்.
இத்தனை பதவிகளை வைத்துக்கொண்டு ஒரு நபர் விடாம இவ்வளவு நாள் பதவிகளை வைத்திருக்கிறீர்களே, யாருக்கு பதவி வெறி ? வாங்க பேசலாம். PWD உங்கள் கையில் இருக்கும், நெடுஞ்சாலைதுறை உங்க கையில் இருக்கும், ஹோம் உங்க கையில்தான் வைத்திருக்கிறீர்கள், யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள், முதலமைச்சராகவும் இருப்பீர்கள் பதவி வெறியை பற்றி பேசலாமா?
இது எந்த பதவி வெறி ? அதிமுகவில் தான் ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் பதவியை எளிய தொண்டன் கூட பெற்று பெரிய நிலைமைக்கு வந்துவிடலாம். ஏதாவது தொண்டனை சொல்லுங்கள் ஓபிஎஸ்யை நாங்கள் ஒதுங்கிக்க சொல்லுகிறோம். எந்த பதவியை வகிக்க மாட்டோம், எங்களது தெய்வம், நாடு போற்றிய நல்ல திட்டங்களை எல்லாம் தந்த இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா வகித்த பொதுச்செயலாளர் பதவியை வகிக்க மாட்டோம்,
தந்தை பெரியார் இடத்திலிருந்து பிரிந்து வந்த பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்திற்கு எப்பொழுதுமே தலைவர் இல்லை, அந்த நாற்காலி காலியாக இருக்கும் என்று சொல்லி எப்படி பொதுச்செயலாளர் பதவி உருவாக்கி பேரறிஞர் அண்ணாவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவும், அதை வழிநடத்தினார்களோ…
அந்த பதவியில் அந்த அம்மாவை அவமானப்படுத்தி, மிகவும் வேதனையோடு சொல்கின்றேன்… அந்த பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் அடைய துடிக்கின்ற நீங்கள் பதவி வெறி பிடித்தவர்களா? அல்லது ஓபிஎஸ் அவர்கள் பதவி வெறி பிடித்தவரா? ஏன் எடுத்த தீர்மானத்தை இப்போது மாற்றுகிறீர்கள், உங்களுக்கு ஜால்ரா அடிப்பதற்கும், கொள்ளை அடிப்பதற்கு ஒரு கூட்டம் என விமர்சித்தார்.