Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK பாஜக சொல்லுறத தான் கேட்கணும்…. மறுத்து பேசவே முடியாது… R.B உதயகுமார் பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் திருநாட்டிற்கு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு வருகின்ற பாரத பிரதமரை வரவேற்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் அவர்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, நேரடியாக சென்று இருவரும் கைகுலுக்கி,

பரஸ்பரன்  நலம் விசாரித்து கொண்ட காட்சி ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது, அது ஒரு புதிய நம்பிக்கையை தான் ஏற்படுத்தி உள்ளது.ஓபிஎஸ் வழியனுப்பிய காட்சியும் ஊடகங்களில்  வெளியிடப்பட்டது. பிரதமரை யார் யாரெல்லாம் வரவேற்க செல்லலலாம் என்பது அவர்களுடைய ( ஓபிஎஸ்)  உரிமை. அதில் நாம் தலையிடுவது என்பது முறையல்ல. கடந்த முறை வருகின்ற போது கூட பாரத பிரதமரை  மாண்புமிகு எதிர்க்கட்சி கட்சி தலைவரும்,  முன்னாள் முதலமைச்சர் எடப்படியார் அவர்கள்…

சென்னை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்கள். ஹெலிகாப்டர் தளத்தில் தான் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார்கள். ஆகவே இது அவர்களுடைய உரிமை யார் ? எங்கே வரவேற்க வேண்டும் என்பது, எங்கே வழி அனுப்ப வேண்டும் என்பதெல்லாம் டெல்லி தலைமையில் இருந்து வரக்கூடிய உத்தரவின் அடிப்படையில் தான் உள்ளது. நான் இங்கே தான் வருவேன், அங்கே தான் போவேன்னுனு யாரும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரை ஒரே நம்பிக்கை சாமானிய முதல்வராக, சரித்திரம் படைத்திட்ட,  முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில்தான் 99 சதவீத தொண்டர்கள்,  எடப்பாடி காட்டுகின்ற பாதையில் பயணித்து, புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மாவின் புனித அரசை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அன்னை தமிழகத்தில் மலரத் செய்வதற்கான தியாக பாதையில் அண்ணன் எடப்பாடி தலைமையிலே பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |