அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்க வர வேண்டும் என்று அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
உலக அளவில் இந்தியர்களின் அறிவு பேசப்படும் ஒன்றாக இருக்கிறது, அ னைவரும் இந்தியர்களை பெரிதும் நேசிக்கிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இந்தியர்களை பெரிய பெரிய உயர் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறது. அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், முக்கியமான பணிகளில் இந்தியர்கள் அமர்த்தப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது. இதனால் இந்திய மாணவர்கள் பலரும் அமெரிக்காவில் சென்று படித்து வருகிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் சீனர்களுக்கு அடுத்தபடியாக அதிகமான உயர்கல்வி படிக்கும் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய மாணவர்களாக இருந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில்தான் வாஷிங்டனில் இருக்கும் அட்லாண்டிக் கவுன்சில் சார்பாக ஒரு இணைய வழி கலந்துரையாடல் நடைபெற்றதில், அமெரிக்கா சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் சிவப்பு கம்பளம் விரித்து இருப்பது தெரியவந்தது. இந்த கலந்துரையாடலில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ரிச்சர்ட் வர்மா கலந்துகொண்டார். அதேபோல தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ்சும் பங்கேற்றார்.
இதில், ஆலிஸ் வெல்ஸ் பேசும் போது, அதிகளவில் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வந்து படிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பதற்றத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சரிந்துள்ளது. உலகளவில் நிச்சயமற்ற தன்மை உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்திய மாணவர்கள் அதிகமானோர் அமெரிக்காவில் வந்து படிக்க வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் விரும்புகிறது என்று கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விசா வழங்குவது ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலை ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயமாக தொடரும். கொரோனா முடிந்த பிறகு அதிகமான இந்திய மாணவர்கள் இங்கு படிக்க வருவதை நாங்கள் உறுதி செய்வோம். கடந்த ஆண்டு 2 லட்சம் இந்திய மாணவர்கள் இங்கு படிக்க வந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.