Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நீங்க எந்த உப்பு சமைக்கிறீங்க”… இந்த உப்பா…. அதாவது இந்துப்பா … ரொம்ப நல்லதாமே… பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது.

இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் என்று நினைக்கின்றனர். உப்பில்  சோடியம் உண்டு. ஆனால் சோடியம் உப்பின் ஒரு பகுதி மட்டும்தான்.

இந்து உப்பில் இரும்பு, துத்தநாகம்,, நிக்கல், கோபால்ட், தாமிரம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறங்களை அளிக்கின்றது. உப்பில் இருக்கும் சோடியம் ஆனது அதிக அளவு தீங்கை விளைவிக்கக் கூடும் என்பதை அறிந்து இருக்கலாம். ஆனால் குறைந்த சோடியமும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும். குறைவான சோடியத்தின் காரணமாக தூக்கமின்மை, மன அழுத்தம், மன சோர்வு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.

உப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் நீண்ட காலமாக தசைபிடிப்போடு இணைக்கபட்டுள்ளது. இது உடலுக்கு சரியான நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு தேவையான தாதுக்கள் ஆகும். உடலில் பொட்டாசியத்தின் ஏற்றத்தாழ்வுகள் தசைபிடிப்பு ஆபத்துகளை உண்டாக்குகிறது. ஆயுர்வேதத்தில் வயிற்றுப்புழுக்கள், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு வீட்டு மருந்தாக செயல்படுவது இந்துப்பு மட்டுமே. இதில் வயிற்றை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாக ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர்.

தொண்டைக்கு இதமளிக்கிறது, அமெரிக்கா  சொசைட்டி அமைப்பு இந்த உப்பை  ஆய்வு செய்ததில் இது தொண்டைப் புண்ணுக்கு சிகிச்சை அளிக்க மிகச்சிறந்த மருந்தாக கூறுகின்றனர். ரத்த அழுத்தத்தை சமநிலை செய்வதற்கு இந்த இந்துஉப்பு பயன்படுகிறது. உயர் அழுத்தம், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகமாக உள்ள இந்து இந்து உப்பை சாப்பிடுவது நல்லது,

ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 8 மணிநேரம் தூங்குவது என்பது அவசியம், அப்போதுதான் உடலின் செயல்பாடுகளில் குறைவில்லாமல் இருக்கும், அடுத்த நாளுக்கான வேலை சிறப்பாக அமையும், இந்துஉப்பு உடலில் நோயின் அளவை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் தூக்கம் நன்றாக வரும். சருமத்திற்கு நன்மை தருகின்றது. சர்மத்தை சுத்தப்படுத்தவும் புத்துயிர் பெறவும் செய்கின்றது.

Categories

Tech |