Categories
மாநில செய்திகள்

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”… ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே…. வைரமுத்து ட்வீட்.!!

ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே என்று கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். 

அமேரிக்காவில் வாஷிங்டனில்  ஐக்கிய நாடுகள்  பொது சபை  கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று பேசினார். மேலும் இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை.  தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார்.

Image

3000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் இந்த பாடலை பாடியதாக கூறினார். உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான் பாரதத்தின் பண்பாடு என்று பேசினார். இந்தியா புத்த மதத்தை தான் வழங்கியதே தவிர யுத்தத்தை அல்ல என்றும்,  ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ள பயங்கரவாதத்தை வேரறுக்க  அனைவரும் இணைய வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார். மேலும் பல இந்தியா பற்றி பெருமையாக பல கருத்துக்களை பேசினார்.

Image result for கவிஞர் வைரமுத்து

இந்நிலையில் தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசியதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில், ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |