Categories
அரசியல் மாநில செய்திகள்

”இந்த கேள்வியை அண்ணன் கிட்ட கேட்கக் கூடாது” – திருப்பி விட்ட சீமான் …!!

தென்காசி மாவட்டம் பாஞ்சங்குலத்துல தீண்டாமை நிலவி வருவது குறித்த கேள்விக்கு,

செய்தியாளர்களிடம் ”அண்ணன் கிட்ட கேட்கக்கூடாது” என பதிலளித்து பேசிய சீமான், பெரியார் மண் என்று, பெரியார் பூமி என்று, சமூக நீதி காத்த காவலர்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்களே திராவிட மாடல் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் ஏன் மாடல் என்று சொல்ல வேண்டும், நாங்கள் எப்பவுமே தமிழ் தேசிய மகன், தமிழ் தேசிய இனத்தின் மகன், எங்களுடைய ஆட்சி முறையை அறம் சார்ந்த ஆட்சி முறை, இப்படி அவர்கள் சொல்லவில்லை.

போன பாராளுமன்ற தேர்தல் முடிந்தது அல்லவா, அதிலிருந்து தயாராக இருக்கிறோம். அடுத்த பாராளுமன்றத்திற்கு, எப்பவுமே தயார் தான். மதங்கள் என்பது இருக்கு, இல்லை என்பதில்லை. எதை சார்ந்து இருக்கனும், என்பது அவரவர் உரிமை, நாங்கள் வந்து சைவ வழிபாட்டு மரபினர், சிவனை வழியில்படுகின்ற சிவனியம், திருமாலை வழிபடுபவர்கள் மாலியம், முருகனை வழிபடுபவர்கள் முருகன் இப்படி எல்லாம் சேர்ந்து சைவம், வைணவம் என்கின்ற சமயங்களாக இருக்கிறது. அதில் மதங்கள் இடை வந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் வெறி, சமய வெறி, கண்ணல் நிகர் தமிழுக்கு,  நோய் நோய் நோயே. இடை வந்த சாதியினும் இடர் ஒழிந்தால் ஆளுவது நம் தாய் தாயே என்கிறார் புரட்சி பாவலர். ஏனென்றால் இடையில் வந்தது, அது அவர் சொல்கிறார் செருப்பால் அடிப்பேன் என்று, யார் இல்லை என்று சொல்கிறார். யாரும் சொல்லவில்லை, எது என் சமயம் என்றுதான் பேசுகிறோம் ? அதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |