Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீ எதுவும் செய்ய கூடாது… தரையில் தான் உக்கார வேண்டும்…. பஞ்.துணை தலைவரின் அடாவடி …!!

கடலூரில் பஞ்சாயத்து தலைவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராஜேஸ்வரியை தரையில் அமர்ந்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் துணை தலைவர் மோகன் தான் இதை செய்ததாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியின் ஆதரவாளர்களும் இன்று காலை புவனகிரி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்கள்,  புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த பகுதியில் இது சம்பந்தமாக ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில்தான் உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் அதிக கவனம் செலுத்தி உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்டவர் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஊராட்சி செயலர் தாமதமாக மாவட்ட நிர்வாகத்திற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் தெரிவிக்காததால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயத்தில் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துணை தலைவர் மோகன் மீது எஸ்சி / எஸ்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இதனால் பஞ்சாயத்து துணை தலைவர் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சம்பவம் தற்போது கடலூர் மாவட்டத்தில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரவணன் கூறும் போது, தேர்தலில் வெற்றி பெற்ற காலத்தில் இருந்த காலத்திலிருந்தே கீழே அமர வைத்தார்கள். அந்த சமயத்தில் தங்கள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இது போல் நடந்ததால் நாங்கள் வெளியே கொண்டு வந்தோம். ஒவ்வொரு முறையும் இதுபோன்று அவமானப் படுத்தப் படுவதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கூறும் போது, பஞ்சாயத்து போர்டில் மீட்டிங் நடக்கும் போது நீ தரையில் தான் உட்கார வேண்டும். நீ எதுவும் செய்யக்கூடாது. நான் தான் எல்லாமே செய்வேன் என்று துணைத்தலைவர் சொல்வார். நானும் அவர் சொல்வது சரி என்று கீழேயே உக்காந்து எல்லாமே கேட்டுக்கொண்டிருப்பேன். அவர் தான் எல்லாமே அறிவிப்பார். கொடி ஏற்றும் போது கூட அவர், நீ ஏற்றக் கூடாது என்று சொன்னார். பஞ்சாயத்தை நீ பாக்குறியா இல்ல, நா பார்க்கட்டுமா என்று கேட்பார். நான் சரி என்று எவ்வளவோ அனுசரித்துச் சென்றேன் என்று தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.

Categories

Tech |