பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்து தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதால் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் பிரிட்டன் போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது பல நாடுகள் பிரிட்டனின் விமான சேவைக்கான தடையை நீக்கியுள்ளது.
ஆனால், பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கு கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.