சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்ணன் தயாநிதி மாறன் சொன்னாங்க… போன தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை தூக்கிட்டு போயி, அந்த பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.
இப்போது சமீபத்துல பாஜக தேசிய தலைவர் நட்டா அங்க போய் பார்வையிட்டுட்டு, 95 சதவீதம் வேலை முடிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லிட்டு போறாரு. அந்த அளவுக்கு ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து கொண்டே இருக்கின்றது. அண்ணன் திரு. வைரமுத்து அவர்கள் வந்திருக்காங்க. கலைஞரோடு பயணித்தவர்.
நேற்று கூட இந்தி திணிப்பதற்கு ஒரு மிகப்பெரிய அறப்போராட்டத்தை வைரமுத்து அண்ணன் அவர்கள் நடத்திருக்காங்க. அதுலயும் ஒரு நகைச்சுவை இருக்கிறது. பொதுக்குழு முடித்து நம்முடைய தலைவர் என்னிடம் அறிவுறுத்தினார்கள். இளைஞரணி சார்பாக, மாணவர் அணி சார்பாக இந்தி திணிப்பு போராட்டத்தை நீ ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மிக வெற்றிகரமாக ஒரு இந்தி திணிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திக் காட்டினோம். பாஜகவும் சேர்ந்து நடத்தினார்கள். நேத்து அவங்களும் போராட்டம் நடத்திருக்காங்க. கேட்டா நாம…. ஆங்கிலத்தை திணிக்கிறோமா ? இப்படி நாம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமா ஏதாவது ஒன்னு சொல்லிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.