Categories
தேசிய செய்திகள்

இந்த ஆப்பை நீங்க வச்சிருக்கீங்களா…. “உடனே வந்து அன்இன்ஸ்டால் செய்யுங்க”… கூகுள் எச்சரிக்கை…!!!

உங்கள் ஸ்மார்ட் போனில் ஒரே விளம்பர தொல்லையாக இருந்தால் இந்த பிரபல ஆப்பை இன்ஸ்டால் செய்து இருக்கிறீர்களா என்று செக் செய்து பாருங்கள். இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சம்பந்தமே இல்லாமல் எக்கச்சக்கமான விளம்பரங்கள், பரிந்துரைகள், பொருத்தமற்ற கன்டென்ட்டால் நிரம்பி வழியும். ஆமென்று கூறினால் நீங்கள் முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்திருக்கும் ஆப்புகளை சரிசெய்யவேண்டும். மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் தேவையற்ற விளம்பரங்களை காட்சிப்படுத்தும், 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள்  கொண்ட மிகவும் பிரபலமான ஆப்பை  கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பார்கோடு ஸ்கேனர் என்ற இந்த செயலி பார்கோடுகளை ஸ்கேன் செய்து தகவல்களைப் பெற மக்களுக்கு உதவும். இந்த செயலியில் எந்த வித சிக்கலும் இல்லை.  கூகுள் பிளே பாஸ் திட்டத்தில் கூட இது சேர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த டிசம்பரில் மதம் வெளியான புதிய வெர்ஷன் மற்றும் பார்கோடு ஸ்கேனர் ஆப்பை ஆட்வேர் மூலம் பாதித்துள்ளது.

இதனால் நீங்கள் உங்களது மொபைல் ப்ரவுசரைத் திறந்ததும் ஏராளமான விளம்பரங்களை உங்களுக்கு அனுப்பும். இதுதொடர்பாக இந்நிறுவனதிற்கு கூகுள்   எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தற்போது இந்த ஆப்  ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பயன்படுத்துபவர்களும் இதனை உடனடியாக நீக்கும் படி கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |