Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா….” அப்ப நீங்க கட்டாயம் உடம்பைக் குறைக்கணும்”…!!

உங்கள் உடம்பில் தேவையில்லாத எடையை குறைக்க வேண்டியது அவசியம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒல்லியா இருக்கும் ஆனா ஃபிட்டா இல்லை என்று கவலைப்படுகிறீர்களா அதற்கு நீங்கள் கொஞ்சம் கூடுதலாக உடம்பிற்கு பயிற்சி அளிப்பது அவசியம். நிறைய உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு போதுமான புத்துணர்ச்சி கிடைக்கின்றது. அதேபோன்று நாம் சரியான எடையில் தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நம்முடைய உடல் வாகுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடையை இழக்க வேண்டியதிருக்கும். அடிப்படையில் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்பட்டால் நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி இதுதான். உங்கள் உடலுக்கு தேவையான எடையைத் தாண்டி கூடுதல் எடை இருந்தால் உடற்பயிற்சி செய்யும் போது அதிகம் சிரமப்படுவீர்கள். எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது கூட ஒருவித அசௌகரியம் ஏற்படும். மூட்டு மற்றும் முதுகு அதிக மாக வலி ஏற்படும். சோர்வாக இருப்பீர்கள். எந்த வேலையும் செய்ய முடியாது. அதே சமயம் அடுத்த வேலையாக நீங்கள் செய்ய வேண்டியது, உங்களது எடையை குறைப்பது தான்.

முதலில் உங்களுடைய பிஎம்ஐ அளவை பரிசோதித்து எக்ஸ்ட்ரா இருக்கும் பவுண்டுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவு கொலஸ்ட்ராலின் அளவும் அதிகமாக இருந்தால் நிச்சயம் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உடல் எடையை குறைப்பதுதான். ரத்த அழுத்தமும், கொலஸ்ட்ராலும் அதிகமாக இருப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும். உடல் எடையை குறைப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |