Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

உங்களுக்குத்தான் இந்த விஷயம்… “ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க”..!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை. குழந்தையை வளர்க்கும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.

குழந்தைகளை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு ஒரு சில தீர்வு இருக்கும். அத்துடன் பெற்றோர்கள் ஒரு முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.

மலச்சிக்கல்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பசலைக் கீரையை எடுத்து பொடியாக அரிந்து வேக வைத்துக் கொடுக்கவேண்டும்.

தேங்காய்ப்பால்

வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் எடுத்து கடித்து சாப்பிட கொடுக்க வேண்டும். அது இல்லை என்றால் தேங்காய் பால் எடுத்து கொடுக்க வேண்டும். பசும்பாலை விட அதிக சத்து நிறைந்தது.

வீடு சுத்தம் செய்தல்

சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு நாம் வீடு பெருக்குவது தவிர்க்கவேண்டும். பெருகும் போது தூசி குழந்தைகளுக்குப் தும்மல், இருமல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

சுத்தம்

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சிறுநீர் மற்றும் வாந்தி எடுக்கும். ஒரு சிறிய பாட்டிலில் எடுத்து அதில் டெட்டால் ,பினாயில் கலந்து வைத்துக்கொண்டு ஒரு மூடியில் துவாரம் போட்டு வைத்து அதனை குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தெளித்தால் நல்ல மனம் இருக்கும்.

உணவு

டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் இரவு சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு கொடுத்து உறங்க வைக்க வேண்டும்.

கால்சியம்

உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுத்தால் அதிலுள்ள பாஸ்பேட் கால்சியம் சத்தை உடல் கெடுதலை ஏற்படுத்தும்.

வசம்பு

குழந்தை வளர்ப்பு ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலை மாட்டி வைத்து விட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

பாலில் தேன் சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது வளர்ச்சி சீராகவும் சரியாகவும் இருக்கும்.

புதினா இலை :

கை குழந்தை தூங்கும் போது ஈ  மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் குழந்தையின் படுக்கையை சுற்றி 5, 6 புதினா இலையைப் போட்டு விட்டால் ஈ அந்த பக்கம் வராது.

குழந்தைகளுக்கு இரவு பேரிச்சபழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

குழந்தைகளின் கண்கள் நடுவே வெள்ளை நிற புள்ளியை அல்லது பூனையின் கண்கள் ஒளிர்வது போல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.

நகம் வெட்டுதல்:

குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்தபின் நகம் வெட்டினால் மிகவும் எளிதாக இருக்கும்.

காதுவலி

குழந்தைகள் அழும்போது பக்கம் கையை காது பக்கத்தில் கொண்டு சென்றால் அவர்களுக்கு காது வலி இருக்கிறது என அர்த்தம்.

வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப்போக்கின் போது உடலில் சோர்வடைகிறது. அவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் சோர்ந்து விடக் கூடும். இதற்கு உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

Categories

Tech |