தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவில் 8,200 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .மாலை 5 மணியுடன் விருப்ப மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமனு தாக்கல் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நேர்காணல் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 9 பேர் குழு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தி வருகின்றது.
இதில் நேர்காணலுக்கு வந்தவர்களிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறுகையில், தேர்தலில் போட்டியிட தற்போது வாய்ப்பு இல்லாதவர்களுக்கு தகுதி இல்லை என்று அர்த்தம் கிடையாது. பிறகு எல்லோருக்குமே வாய்ப்பு வழங்கப்படும். மேலும் நேர்காணலில் கலந்து கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் கூட முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். இது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி தன்னுடைய முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.