Categories
Tech டெக்னாலஜி

You Tube வீடியோக்களில்….. இனி இப்படியும் பண்ணலாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

உலகம் முழுதும் பெரிதும் பார்க்கப்படும் சமூகவலைதளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. தினசரி பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பயனாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ரியாக்‌ஷன்ஸ் அம்சம் யூடியூப்பில் வெளியாக இருக்கிறது. இப்போது வாட்ஸ்அப்பில் சோதனையில் உள்ள ரியாக்‌ஷன்ஸ் யூடியூப்பிலும் சோதனை நிலையில் உள்ளது.

இதுவரையிலும் பேஸ்புக்கில் லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற 3 ஆப்ஷன்கள் மட்டுமே பயனர்கள் வீடியோ தொடர்பாக கருத்து பரிமாறும் வண்ணம் இருந்தது. இதில் அண்மையில் டிஸ்லைக் அம்சமானது நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது யூடியூப் ரியாக்‌ஷன் அம்சத்தை கொண்டுவர உள்ளது. இதன் வாயிலாக பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களுக்கு எமோஜ்ஜிகள் மூலம் ரியாக்ட் செய்ய முடியும்.

அதிலும் குறிப்பாக வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் போதே தங்களுக்கு பிடித்த இடங்களில் ரியாக்ட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் 8 ரியாக்‌ஷன் உள்ள எமோஜிக்களை தற்போது வழங்கவுள்ளது. மேலும் விரைவில் கூடுதல் எமோஜ்ஜிக்களும் இதில் சேர்க்கப்படவுள்ளது. இப்போது சோதனைக்காக ஒரு சில வீடியோக்களில் மட்டுமே நாம் எமோஜ்ஜிக்களை பயன்படுத்த முடியும்.

Categories

Tech |