யூடியூப் நிறுவனம், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததை எதிர்க்கும் வகையில் ரஷ்ய நாட்டின் சேனல்களின் விளம்பர வருவாயை தடை செய்திருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நான்காம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது உலக நாடுகளிடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்படுகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம், இந்தப் போரை எதிர்க்கும் வகையில் ரஷ்ய சேனல்களின் விளம்பர வருமானத்தை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது.
யூடியூப் நிறுவனம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக இணையதள நிறுவனங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரஷ்ய சேனல்களின் விளம்பர வருமானத்தை தடை செய்திருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.