Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ மகிழ்ச்சியாக இருப்பாய்”…. சொர்க்கத்திலிருக்கும் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து….. பாடகி சித்ரா உருக்கம்..‌.!!!!

தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பாடகி சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது நந்தனா ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நந்தனாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பாடகி சித்ரா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் சொர்க்கத்தில் உள்ள தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தும் உனக்கு அதிக வயது ஆகாது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாடகி சித்ராவின் பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |