Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”கனவு பலிக்கும்” நல்ல பெயர் எடுப்பீர்கள் ….!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று இன்பங்கள் இல்லம் தேடிவரும் நாளாக இருக்கும். எதிர்பார்த்த தகவல் காலை நேரத்திலேயே வந்து சேரும். கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கனவு தொல்லைகள் இன்று இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கனவு பலிக்கக் கூடிய  சூழலும் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறையாக இருங்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துப் பேசுங்கள்.

கௌரவம் பாதிக்கும் படியான சின்ன சின்ன சூழல்கள் வரக்கூடும். உங்களுடைய பேச்சில் மட்டும் நிதானம் இருந்துவிட்டால் இன்று அனைத்து நல்ல பெயர்களையும் நீங்கள் எடுக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் நண்பருடன் அனுசரித்துச் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளுமே இன்று தடையின்றி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இதுவரை உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். அதனால் ஏற்பட்ட மன பயமும் நீங்கும். உபரி பணவரவு கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதே போல காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |