ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களால் சில விஷயங்களை செய்ய முடியாமல் போகலாம் என்று சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனில் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நிலையில் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தொலைக்காட்சியில் நேரடி கானல் அளித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ஜெர்மனி மக்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு இன்னும் தொற்று பரப்வும் நிலை இருக்கிறதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆகையால் எஞ்சியுள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் அளிக்க உத்திரவாதம் கிடையாது.
எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களால் இனிவரும் காலங்களில் சில விஷயங்கள் செய்ய முடியாமல் போகலாம். பல உலக நாடுகள் ஜெர்மனியை விட தடுப்பூசி வழங்குவதில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது. அது தனக்கு எரிச்சலூட்டுவதாக சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.