Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவங்க ஏன் அங்க போனாங்க… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தாய் கோபித்துக் கொண்டு சென்றதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் நயினார்புரம் பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ பாலகிருஷ்ணன் என்ற 17 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய டிவிக்கு தவணை கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பொன்மணி செட்டிவிளை பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இவ்வாறு தாய் தன்னை விட்டு பிரிந்து சென்றதை தாங்க முடியாத சிவ பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |