Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தனது நண்பர்களுடன் அமைச்சியார்புரம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் நீரில் மூழ்கியுள்ளான்.

இதனை பார்த்த நண்பர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 14 மணி நேரம் போராடி பிரதீப்பை பிணமாக மீட்டனர். இதனை அடுத்து பிரதீப்பின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |