கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியம்பதி பகுதியில் ஆனந்த குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். இதனால் செல்போனில் கேம் விளையாட கூடாது என ஆனந்தகுமாரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் ஆனந்தகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.