நண்பர்களுடன் குளித்து கொண்டிருக்கும் போது கல்லூரி மாணவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பழவந்தாங்கல் பகுதியில் மேத்யூ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மேத்யூ தனது நண்பர்களான பெண்ஸ்டன் உட்பட நான்கு பேருடன் திருவான்மியூர் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருந்த போது மேத்யூ மற்றும் பெண்ஸ்டன் ஆகிய இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்று விட்டது.
அப்போது மிகவும் சிரமப்பட்டு பெண்ஸ்டன் கரைக்கு வந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் மாயமான மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.