நியூஸிலாந்தில் ஒரு இளம்பெண், அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பல மக்களுக்கு தன்னம்பிக்கை சிகரமாக இருக்கிறார்.
நியூஸிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய டைலா கிளெமென்ட் என்ற இளம்பெண் பிறக்கும்போதே Moebius syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரால் சிரிக்க முடியாது அவரின் கண் விழிகளை கூட அசைக்க முடியாது. இது ஒரு அரிதான பிறவி நோய். அதாவது கண் அசைவுகளையும், முகத்தின் பாவனைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புகள், வளர்ச்சியடையாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. எனவே, அவர் சிரிக்காமல் இருப்பதை, அதிகமாக நக்கல் செய்து விமர்சித்திருக்கிறார்கள். எனினும் அவர்களையெல்லாம் தாண்டி இன்று சாதித்திருக்கிறார் டைலா. இவர், தற்போது பாராலிம்பிக் சாதனை படைத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் அதிக பிரபலமடைந்திருக்கிறார். மேலும், இந்த நோய் 4 மில்லியன் மக்களில் ஒருவருக்கு ஏற்படக்கூடியது. இவரால் தன் புருவத்தை கூட உயர்த்த முடியாது. இந்த நோய்க்கு தற்போது வரை தகுந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையான சிகிச்சை பெற முடியாவிட்டாலும் அவருக்கு சில சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
எனினும், இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஆயிரக்கணக்கான பின்பற்றுபவர்களை வைத்திருக்கிறார். மேலும், பலருக்கும் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் தனக்கு சிரிக்க முடியவில்லை என்பது தான் தன் நிலைக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இவரின் பெற்றோர் இவருக்கு பல தடவை அறுவை சிகிச்சை மேற்கொண்டு முகபாவனைகளை வர வைக்க முயற்சித்தனர். எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. தற்போது டைலா, இந்த நிலையிலேயே திருப்தி அடைந்து விட்டார். இவரைப் போன்று, சமூக மக்களால் கிண்டலுக்கு ஆளாக்கப்படுபவர்களுக்கு ஊக்கமளித்துக்கொண்டிருக்கிறார். பல மக்களின் வாழ்வில் நேர்மறை எண்ணங்களை விதைத்து வருகிறார்..