Categories
உலக செய்திகள்

“எதற்காக என்னை பிறக்க வைத்தீர்கள்!”… தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு…!!

இங்கிலாந்தில் ஒரு இளம்பெண், தான் பிறந்தபோது, தனது தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வித்தியாசமான ஒரு வழக்கு வந்திருக்கிறது. அதில் எவீ டூம்ஸ் என்ற 20 வயது இளம்பெண், தான் பிறந்த போது, தன் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிலிப் மிட்செல் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில், மருத்துவர் பிலிப், என் அம்மாவிற்கு போலிக் ஆசிட் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், என் அம்மா சிறிது காலம் கழித்து கர்ப்பம் அடைந்திருப்பார்.

நான் பிறக்காமலேயே இருந்திருப்பேன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது அந்த இளம் பெண்ணிற்கு, முதுகுப்பகுதி பாதிப்படைந்து வாழ்க்கை முழுவதையும் டியூப் உதவியால் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளதாவது, எவீ டூம்ஸ்-ன் தாய்க்கு தகுந்த அறிவுறுத்தல்களை மருத்துவர் வழங்கியிருக்க வேண்டும்.

அப்படியென்றால், அவரின் கர்ப்பம் தள்ளி சென்று, சிறிது நாட்கள் கழித்து கர்ப்பம் அடையும்போது ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறந்திருக்கும். எனவே, அந்த இளம்பெண்ணுக்கு இழப்பீடு தொகை பெற உரிமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.  எவீ டூம்ஸ்-ன் தாய் நீதிமன்றத்தில், தகுந்த முறையில் சரிவிகித உணவு உட்கொண்டால்,  போலிக் ஆசிட் மருந்துகள் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |