Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்காமல் 2 நாள்… வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொத்தனார்… அறந்தாங்கியில் அதிர்ச்சி..!!

பின்னர் அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதனை செய்து பார்த்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தனலெட்சுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து  அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பின் புகாரின்படி போலீசார் சுரேஷை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சுரேஷ் வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது தான் அதிர்ச்சி தரக்கூடிய  தகவல்கள் வெளியானது. அதாவது தலைமறைவான சுரேசுக்கு 2 மனைவிகள் இருக்கின்றனர். இதில் முதலாவது மனைவி இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரே பகுதியில் வசித்து வந்த சுரேஷுக்கு தனலட்சுமி மீது ஆசை வந்துள்ளது. இதனால் சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருந்த சுரேஷுக்கு கடந்த 24-ந்தேதி ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நாள் இரவு தனலட்சுமி வீட்டை விட்டு தனியாக வந்தபோது சுரேஷ், தனலட்சுமியின் வாயை பொத்தி, தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளார். அங்கு 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2 நாட்களும் சாப்பாடு கூட கொடுக்காமல் தனலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
தனலட்சுமியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்த நிலையிலும், சுரேஷ் தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பதை அவர்களிடம் சொல்லாமல் எனக்கென்ன என்று ஹாயாக அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். கடைசியில் அவர்கள் போலீசில் புகார் தெரிவிக்க இருப்பதாக தகவல் கிடைத்ததும், போலீசாருக்கு பயந்து போன சுரேஷ் தனலட்சுமியை தனது வீட்டில் அடைத்து வைத்துள்ள தகவலை அவளது சகோதரரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாகியுள்ள  சுரேசை தேடி வருகின்றனர். சாப்பாடு கூட கொடுக்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |