மலேசியாவை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாய் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு பதிலாக வேறொருவருக்கு மாற்றி அனுப்பியிருக்கிறார்.
மலேசியாவை சேர்ந்த பஹதா பிஸ்தாரி என்னும் இளம் பெண், தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாயின் வங்கி கணக்கிற்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, தன் தாயிடம் பணம் அனுப்பப்பட்ட ரசீதை பார்க்குமாறு கூறியிருக்கிறார். அவரின் தாயார் பணம் வந்து சேரவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, தான் அனுப்பிய வங்கிக் கணக்கின் விவரங்களை அந்த பெண் பார்த்திருக்கிறார். அப்போது தான், பணம் வேறு யாருக்கோ தவறுதலாக அனுப்பப்பட்டது தெரிய வந்திருக்கிறது. வங்கிக் கணக்கின் எண்களை தவறுதலாக மாற்றி அனுப்பியிருக்கிறார். எனவே, உடனடியாக அந்த நபரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த நபர், அந்த தொகையை நன்கொடையாக கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதனால், பதறிப்போன அந்த பெண் நடந்த விஷயத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதற்கு மறுநாளே அந்த நபர் தவறுதலாக தனக்கு வந்த பணத்தை அந்த பெண்ணிடம் ஒப்படைத்து விட்டார்.
இதனால், அந்த பெண் ஆச்சர்யமடைந்தார். அந்த நபர், அந்த பெண்ணை பயமுறுத்துவதற்காக சிறிது நேரம் விளையாட்டிற்காக கூறிவிட்டு, அதன் பிறகு பணத்தை அனுப்பியிருக்கிறார். எனவே, அந்த பெண் கண்ணீருடன் அவருக்கு நன்றி கூறியுள்ளார்.