பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஞானியார் குடியிருப்பு பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் மகேஸ்வரியின் அண்ணன் மகள் பூப்புனித நீராட்டு விழாவானது கடந்த 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால் மகேஸ்வரியால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு முத்துக்குமரன் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.