மெக்சிகோ நாட்டிலிருந்து, அமெரிக்காவிற்கு செல்ல கடலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி ஓரமாக நீச்சலடித்து வந்த ஒரு இளம்பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டிற்குள் நுழைய Tijuana மற்றும் San Diego போன்ற இரண்டு பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த வேலியோரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 70 பேர் நீச்சலடித்து வந்துள்ளனர். அந்தப் பகுதி அதிக நீரோட்டம் உடையது. எனவே, அங்கு நீச்சலடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அந்த ஆபத்தான பகுதியில் ஒரு இளம்பெண் நீச்சலடித்து வந்து நீரில் மூழ்கி விட்டார். கடலுக்குள் நீச்சலடித்து வந்த 70 நபர்களில் 13 நபர்களை மீட்டு விட்டதாக அமெரிக்காவின் கடலோர காவல்படை கூறியிருக்கிறது. அந்த இளம்பெண்ணை காப்பாற்றுவதற்கு, உதவிக்குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்டும் காப்பாற்ற முடியாமல் போனது.
36 நபர்களை எல்லையில் இருக்கும் சோதனை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். எனினும் மீதமிருந்த 33 நபர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.