Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறுத்தப்பட்ட திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோடிமுனை பகுதியில் மீனவரான ஜான் ராயல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிலானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஏஞ்சல் என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மே மாதம் ஏஞ்சலுக்கு சென்னையில் வசிக்கும் வாலிபருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஏஞ்சலுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏஞ்சலின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |