Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட கணவர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரபியதுள் பசாரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பசாரியாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு முகமது நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையில் பசாரியாவிற்கு 2-வது திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பசாரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பசாரியா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |