Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் திடீரென சரிந்த மணப்பெண்… பின்னர் ஏற்பட்ட சோகம்… கதறும் மணமகன்..!

திருமணத்திற்கு தயாராக இருந்த பெண் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி வினிதா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வெளிவந்த அறிக்கையில் நுரையீரல் பிரச்சனையால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 6 மாதங்களாகவே நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார் வினிதா. தனது கண்முன்னேயே வினிதா உயிரிழந்ததால் சஞ்சய் கதறி அழுதார். உறவினர்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது. அவர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கலங்க செய்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |