திருமணமான 20 நாட்களிலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் மகாலிங்கம் என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் சங்கீதாவிற்கு விருப்பம் இல்லை. அதனை மீறி பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தால் கோபமடைந்த சங்கீதா தனது பெற்றோருடன் பேசாமலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து சங்கீதா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆனைமலை காவல்துறையினர் திருமணமான 20 நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.