அமெரிக்காவில் இரவு நேரம் தனியாக வந்த பெண்ணிடம் இனவெறித் தாக்குதல் நடத்தி முகத்தில் தீ வைத்து எரித்த சம்பவம் நடந்தேறியுள்ளது
அமெரிக்காவை சேர்ந்தவர் Althea என்ற இளம்பெண். இவர் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த தந்தை தாய்க்கு பிறந்தவர். சில தினங்களுக்கு முன்பு இரவு ஒரு மணி அளவில் மடிசான் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் தனது காரை Althea நிறுத்தியபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இனவெறியை தூண்டும் விதமாக Althea-வை அழைத்தனர். அதன்பிறகு நால்வரில் ஒருவன் லைட்டர் பிலிட் திரவத்தை Althea மீது ஊற்ற மற்றொருவன் நெருப்பை பற்ற வைத்து விட்டான்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக நெருப்பை அனைத்துவிட்டு Althea தனது வீட்டிற்கு சென்று தாயாரிடம் கூறியுள்ளார். பிறகு தாயின் அறிவுரைப்படி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். முகத்தில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் Althea நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த இனவெறி தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.