குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கம்பேட்டை பகுதியில் வசித்து வரும் செல்வகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 1/4 வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் கான்ட்ராக்ட் அடிப்படையில் பார்த்திபன் விருதுநகர் மாவட்டத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் செல்வகுமாரியும் அவரது மாமியாரும் திருவாவடுதுறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் செல்வகுமாரி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதோடு அவரது குழந்தையும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரி தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.