Categories
உலக செய்திகள்

மர்மமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண்.. தப்பிச்சென்ற நபர்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் குடியிருப்பு ஒன்றில் ஒரு இளம்பெண் மர்மமாக கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் நியூட்டன் பகுதியில் இருக்கும் Unett என்ற வீதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் இளம் பெண் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குடியிருப்புக்குள் சென்ற காவல்துறையினர், அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு, பல தடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஒரு இளம்பெண் உயிரிழந்து கிடந்துள்ளார்.  அங்கு வேறு ஒருவரும் இல்லை. காவல்துறையினர் வரும் சமயத்தில் ஒரு நபர் அந்தப் பகுதியிலிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் உயிரிழந்த பெண்ணிற்கு அறிமுகமானவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த வீட்டில் ஒரு குழந்தை இருக்கும், அதனை அந்த நபர் எடுத்துச்சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அந்த இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வந்து சோதனையில் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அந்த குடியிருப்பை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள  கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

Categories

Tech |