கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற கிருபா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கிருபா ஸ்ரீ-யின் பெற்றோர் அவரை தோழியின் வீடு மற்றும் உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் கிருபா ஸ்ரீயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கிருபா ஸ்ரீயை தீவிரமாக தேடி வருகின்றனர்.