Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

இளம்பெண்ணை முதல் கணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் பொன்ராஜ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கீதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதாவிற்கு ஏற்கனவே கண்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா கண்ணனை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முறையாக விவாகரத்து பெறாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதா மீண்டும் திருமணம் செய்ததால் கோபமடைந்த கண்ணன் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கொலை குற்றவாளியான கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |